/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.,வினர் ஆர்ப்பாட்டம்
/
மின் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.,வினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.,வினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 26, 2024 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தே.மு.தி.க., சார்பில் நேற்று நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமை வகித்தார். அதில் வீடு, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியதை கண்டித்தும், ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாட்டை கண்டித்தும், காவிரி ஆற்றில் தமிழ-கத்திற்கு உரிய நீரை திறக்காத கர்நாடகா அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.