/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 28, 2024 02:00 AM
திருச்செங்கோடு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், திருச்செங்கோட்டில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் பாலவிநாயகம் தலைமை வகித்தார். கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். இந்த திட்டங்களுக்கு போதுமான ஊழியர் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். பயனாளிகள் தேர்வு குறித்தான திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை உடனே வெளியிட வேண்டும். பயனாளர்களின் பட்டியலை இறுதிபடுத்திட உரிய கால அவகாசம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.