ADDED : செப் 09, 2026 06:49 AM

எலச்சிபாளையம்:எலச்சிபாளையம் அருகே, சக்கராம்பாளையம்
பஸ் ஸ்டாப்பில், கடந்த, 3ல் தனியார் கல்லுாரி பஸ் மோதி, ஒரே குடும்பத்தை
சேர்ந்த, நான்கு மாணவியர் உயிரிழந்தனர்.
இந்த மாணவிகளுக்கு, தலா,
10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும். பள்ளி நேரத்தில் காலை, மாலை
இருவேளையும் அரசு பஸ் இயக்க வேண்டும். விபத்துகளை தடுக்க
அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். சக்கராம்பாளையம் பிரிவு
சாலையில், உயர்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மாலை, 6:00 மணிக்கு,
எலச்சிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே, மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் ரமேஷ்
தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் கந்தசாமி,
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜன்
உள்பட பலர் கலந்துகொண்டனர்.
