/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வடகிழக்கு பருவ மழையால் பாலங்களில் துார்வாரும் பணி
/
வடகிழக்கு பருவ மழையால் பாலங்களில் துார்வாரும் பணி
ADDED : ஆக 17, 2024 02:18 AM
சேந்தமங்கலம்;தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. கொல்லிமலையில் பெய்யும் கன மழையால், ஆண்டுதோறும் மழைநீர் காற்றாற்று வெள்ளமாக மாறி, அடிவாரத்தில் உள்ள கருவாட்டாறு, கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால், வெள்ளப்பெருக்கின் போது, ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்கள் பாதிக்கப்படாத வகையில் மழைநீர் செல்ல ஆறுகளை துார்வார வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கொல்லிமலை நெடுஞ்சாலைத்துறை சார்பில், காரவள்ளி, காளப்பநாய்க்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களின் அடியில் மழை நீர் எளிதாக செல்லும்படி, முட்புதர்களை அகற்றி, துார்வாரும் பணி நடந்தது.

