/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டம் முழுதும் தொடர் மழை மோகனுாரில் 107 மி.மீ., பதிவு
/
மாவட்டம் முழுதும் தொடர் மழை மோகனுாரில் 107 மி.மீ., பதிவு
மாவட்டம் முழுதும் தொடர் மழை மோகனுாரில் 107 மி.மீ., பதிவு
மாவட்டம் முழுதும் தொடர் மழை மோகனுாரில் 107 மி.மீ., பதிவு
ADDED : மே 19, 2024 02:56 AM
நாமக்கல்: தமிழகத்தில், அக்னி நட்சத்திரம் துவங்கியது முதல், பல்வேறு மாவட்டங்களில், தொடர் மழை பெய்து வருகிறது. அதேபோல், வெயிலின் தாக்கமும் அதிகளவில் காணப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டாலும், எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. மாவட்டம் முழுதும், ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில், சொற்ப அளவிலேயே மழை பெய்து வருகிறது.
இதுபோதுமான அளவுக்கு இல்லை என்றாலும், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 1 முதல், நேற்று வரை, 18 நாட்களில், 510 மி.மீ., மழை பெய்துள்ளது.
இந்நிலையில், நேற்று காலை, 6:00 மணி வரை பெய்த மழையளவு (மி.மீ.,) பின்வருமாறு: மங்களபுரம், 19, ராசிபுரம், 3, சேந்தமங்கலம், 1, கலெக்டர் அலுவலகம், 18.50, கொல்லிமலை, 6 என, மொத்தம், 47.50 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. மொத்தமாக, மாவட்டம் முழுதும், கடந்த, 18 நாட்களில், 510 மி.மீ., மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில், மோகனுாரில் அதிகபட்சம், 107 மி.மீ., மங்களபுரத்தில், 50.60 மி.மீ., கொல்லிமலையில், 41 மி.மீ., மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

