/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குளக்கரையை அடைக்காததால் தேங்கிய மழை நீர் வெளியேற்றம்
/
குளக்கரையை அடைக்காததால் தேங்கிய மழை நீர் வெளியேற்றம்
குளக்கரையை அடைக்காததால் தேங்கிய மழை நீர் வெளியேற்றம்
குளக்கரையை அடைக்காததால் தேங்கிய மழை நீர் வெளியேற்றம்
ADDED : மே 20, 2024 01:47 AM
கரூர்: கட்டுமான பணிக்கு உடைக்கப்பட்ட குளக்கரை, அடைக்காமல் விட்டதால் தேங்கிய மழைநீர் முழுவதும் வெளியேறி வருகிறது.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜெகதாபி பஞ்சாயத்து வறட்சியான கிராமம். இங்கு ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இங்கு பெய்யும் மழையை தேக்கி வைக்க வேண்டும் என்பதற்காக, பொரணியில் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் இரண்டு குளங்கள், பல ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்டுள்ளது.
ஜெகதாபி பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் உள்ள குளத்தில், சில மாதங்களுக்கு முன் தெற்கு குளத்தில் வரத்து வாரியில், சிறிய தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதற்காக, கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல, தெற்கு குளத்தில் கரைகள் உடைத்து கொண்டு சென்று உள்ளனர். பணிகள் முடித்த நிலையில், உடைத்த கரையை சரி செய்யாமல் விட்டு விட்டனர்.
வெயில் சுட்டெரித்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் கோடை மழை பரவலாக பெய்தது. தற்போது மழையால் தெற்கு குளம் நிரம்பிய நிலையில், கரையில் உடைப்பு வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இது குறித்து, பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும், இதுவரை மணல் மூட்டைகளோ அல்லது கரையை மீண்டும் அமைக்கும் பணிகளோ துவங்கப்படாததால் குளத்து நீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது.
எனவே, போர்க்கால அடிப்படையில் உடைபட்ட கரையை சரி செய்து, நீரை வெளியேறாமல் தடுக்கும்படி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

