/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் போதை பொருள் விழிப்புணர்வு சிலம்ப பேரணி
/
நாமக்கல்லில் போதை பொருள் விழிப்புணர்வு சிலம்ப பேரணி
நாமக்கல்லில் போதை பொருள் விழிப்புணர்வு சிலம்ப பேரணி
நாமக்கல்லில் போதை பொருள் விழிப்புணர்வு சிலம்ப பேரணி
ADDED : பிப் 24, 2025 03:30 AM
நாமக்கல்: சட்ட உரிமைகள் சேவை இயக்கம், மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், போதை பொருள் விழிப்புணர்வு சிலம்ப பேரணி, நாமக்கல்லில் நேற்று நடந்தது.
நாமக்கல் டவுன் போலீஸ் எஸ்.ஐ., குணசேகரன் பேரணியை துவக்கி வைத்தார். நாமக்கல் மகளிர் மேல்நிலைப்பள்ளி முன் துவங்கிய பேரணி, பரமத்தி சாலை, கோட்டை சாலை, சேலம் சாலை கார்னர், மெயின்ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், பூங்கா சாலை வழியாக சென்று, காந்தி சிலை முன் முடிந்தது.
பேரணியில், மாணவ, மாணவியர் பங்கேற்று, சிலம்பம் சுற்றிய-படி ஊர்வலமாக சென்று, பொதுமக்களுக்கு போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், போதை பொருட்களின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசு-ரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.தேசிய தலைவர் சுரேஷ், பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கினார். சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்க மாவட்ட செயலாளர் சுரேஷ்-குமார், சிலம்பம் ஆசிரியர் கார்த்திக் உள்பட பலர் பங்கேற்றனர்.