/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உற்பத்தி, நுகர்வு குறைந்ததால் முட்டை கொள்முதல் விலை சரிவு
/
உற்பத்தி, நுகர்வு குறைந்ததால் முட்டை கொள்முதல் விலை சரிவு
உற்பத்தி, நுகர்வு குறைந்ததால் முட்டை கொள்முதல் விலை சரிவு
உற்பத்தி, நுகர்வு குறைந்ததால் முட்டை கொள்முதல் விலை சரிவு
ADDED : ஏப் 23, 2024 08:41 PM
நாமக்கல்:நாமக்கல் மண்டலத்தில், தினசரி, 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதன்படி கடந்த, 1ல் கொள்முதல் விலை, 426 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து, 12ல், 420, 15ல், 430, 17ல், 435, 18ல், 440 காசு என படிப்படியாக அதிகரித்தது. நேற்று முன்தினம், 10 காசு சரிந்து, 430 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று மேலும், 20 காசு குறைக்கப்பட்டு, 410 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இரண்டு நாட்களில், 30 காசு சரிந்துள்ளது.
இதுகுறித்து, தமிழக முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:
தமிழகத்தில் கடும் வெயிலால் முட்டை உற்பத்தி, 15 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சத்துணவு திட்டத்திற்கு அனுப்பப்படும் முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. வெளிநாட்டிற்கு மாதம், 15 கோடி முட்டை ஏற்றுமதி செய்த நிலையில், தற்போது, 50 சதவீதம் குறைந்துள்ளது.
இதற்கிடையே, ஆந்திரா மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலையை குறைத்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் விலையை குறைக்காவிட்டால், முட்டைகள் விற்பனையின்றி தேக்கம் அடைந்துவிடும். இதனால், முட்டை கொள்முதல் விலையை குறைக்க வேண்டிய நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

