ADDED : மே 11, 2024 06:52 AM
நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், தினசரி, 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்), தினசரி முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த, 29ல் கொள்முதல் விலை, 410 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து படிப்படியாக உயர்ந்து, கடந்த, 4ல், 500 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 5ல், 510, 6ல், 515, 7ல், 520, 8ல், 525, 9ல், 535 என, உயர்த்தப்பட்டது. இந்நிலையில், நேற்று மேலும், 10 காசு அதிகரித்து கொள்முதல் விலை, 545 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 580, ஐதராபாத், 510, விஜயவாடா, 525, பர்வாலா, 530, மும்பை, 545, மைசூரு, 585, பெங்களூரு, 580, கோல்கட்டா, 605, டில்லி, 530 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், நாமக்கல் மற்றும் பல்லடத்தில் நடந்த கூட்டத்தில், முட்டைக்கோழி கிலோ, 95 ரூபாய், கறிக்கோழி கிலோ, 130 ரூபாய் என, பழைய விலையே நிர்ணயம் செய்யப்பட்டது.