/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முட்டை விலை கிடுகிடு 3 நாளில் 60 காசு உயர்வு
/
முட்டை விலை கிடுகிடு 3 நாளில் 60 காசு உயர்வு
ADDED : மே 03, 2024 09:02 PM
நாமக்கல்:நாமக்கல் மண்டலத்தில், தினசரி, 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு, 'நெக்' தினசரி விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
கடந்த, 30ல், 420 காசாக இருந்த முட்டை விலை மே, 1ல், 20 காசு, 2ல், 20 காசு, நேற்று மாலை மேலும், 20 காசு உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 480 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. முட்டை விலை கடந்த, 5 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 3 நாட்களில், 60 காசு உயர்ந்துள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முக்கிய நகரங்களில், ஒரு முட்டையின் விலை நிலவரம்:
சென்னை, 460, பர்வாலா, 395, பெங்களூரு, 470, டில்லி, 410, ஐதராபாத், 400, மும்பை, 455, மைசூரு, 475, விஜயவாடா, 385, ஹொஸ்பேட், 425, கோல்கட்டா, 440 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.