ADDED : ஜூலை 28, 2024 02:20 AM
நாமக்கல்;நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது.
அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 490 காசுக்கு விற்ற முட்டை விலை, 30 காசு குறைத்து, 460 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:சென்னை, 560, ஐதராபாத், 460, விஜயவாடா, 480, பர்வாலா, 410, மும்பை, 520, மைசூரு, 525, பெங்களூரு, 525, கோல்கட்டா, 530, டில்லி, 440 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதேபோல், பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 87 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 104 ரூபாய்க்கு விற்ற கறிக்கோழி விலையிலும் எந்த மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

