/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'சிப்காட்' திட்டத்தை கைவிடக்கோரி கறுப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு
/
'சிப்காட்' திட்டத்தை கைவிடக்கோரி கறுப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு
'சிப்காட்' திட்டத்தை கைவிடக்கோரி கறுப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு
'சிப்காட்' திட்டத்தை கைவிடக்கோரி கறுப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு
ADDED : மார் 25, 2024 01:10 AM
நாமக்கல்:மோகனுார்
அருகே, 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி,
விவசாயிகள் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்து, வீடுகளில்
கறுப்புக்கொடி கட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல்
மாவட்டம், மோகனுார், வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட
சுற்றுவட்டார பகுதிகளில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கப்படும்
என, தமிழக அரசு அறிவித்துள்ளது. அப்பகுதியில் தொழிற்பேட்டை
அமைந்தால், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரம்
பாதிக்கப்படும் எனக்கூறி, 200க்கும் மேற்பட்ட விவசாய
குடும்பத்தினர், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைப்பதை கைவிட
வலியுறுத்தி, 55 கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில்,
'சிப்காட் எதிர்ப்பு இயக்கம்' அறிவிப்புபடி 'சிப்காட்' தொழிற்பேட்டை
திட்டத்தை ரத்து செய்யக்கோரி, அப்பகுதி விவசாயிகள், தங்களின்
வீடுகள் முன், தேர்தலை புறக்கணிப்பதாக நோட்டீஸ் ஒட்டி,
கறுப்புக்கொடி ஏற்றியுள்ளனர்.
இதுகுறித்து, 'சிப்காட்' எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் கூறியதாவது:
'சிப்காட்'
திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் ஏப்., 19ல், நடக்கும்
லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இதையொட்டி,
எங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி எங்களின் எதிர்ப்பை
தெரிவித்துள்ளோம். நாமக்கல் கலெக்டர் எங்களை அழைத்துப்பேசி
'சிப்காட்' திட்டத்தை கைவிடுவதாக உறுதியளித்தால், நாங்கள்
தேர்தலில் ஓட்டு போடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

