/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெள்ள நிவாரண முகாமில் மக்களை சந்தித்த இ.பி.எஸ்.,
/
வெள்ள நிவாரண முகாமில் மக்களை சந்தித்த இ.பி.எஸ்.,
ADDED : ஆக 03, 2024 11:11 PM
குமாரபாளையம்:மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீரால், காவிரி கரையோரத்தில் வீடுகளில் வெள்ளம் புகுந்தது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளான மணிமேகலை தெரு, இந்திரா நகர், கலைமகள் வீதி, சின்னப்ப நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகள், பள்ளிப்பாளையம் காவிரி கரையோர பகுதிகளான ஜனதா நகர், நாட்டா கவுண்டன்புதுார், பாவடி தெரு, அக்ரஹாரம் பகுதிகளிலும் வெள்ளம் புகுந்தது.
இதனால் இப்பகுதிகளில் வசிக்கும், 300 குடும்பங்களை சேர்ந்த, 900 பேர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை முதல்வர் இ.பி.எஸ்., நேற்று சந்தித்தார். உடை, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் கூறுகையில், ''அ.தி.மு.க., ஆட்சியில் வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளாகும் மக்களுக்கு மாற்றிடம் வழங்கி, வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், கரையோரத்தில் இருந்து வெளியேற மறுத்தனர். தற்போது மாற்றிடம் செல்ல தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதை அரசிடம் வலியுறுத்தி, அவர்களுக்கு மாற்றிடம் பெற்றுத்தர முயற்சி செய்வோம்,'' என்றார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, நகர செயலர் பாலசுப்ரமணி, ஒன்றிய செயலர்கள் செந்தில், குமரேசன் உட்பட பலர் சென்றனர்.