/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மஞ்சள் விலை சரிவு விவசாயிகள் கவலை
/
மஞ்சள் விலை சரிவு விவசாயிகள் கவலை
ADDED : மார் 29, 2024 05:10 AM
நாமகிரிப்பேட்டை: மஞ்சள் சீசன் தொடங்கிய, 3வது வாரத்தில் மஞ்சள் விலை மூட்டைக்கு, 3,000 ரூபாய் குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நாமகிரிப்பேட்டையில், கூட்டுறவு அமைப்பான, ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம், வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது. சீசன் தொடங்கிய பின், 2 வாரங்களாக மஞ்சள் மூட்டை, 22,000 ரூபாயை தாண்டி விற்பனையானது.
இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், நேற்று திடீரென மஞ்சள் விலை குறைந்துள்ளது. நேற்று, 840 மூட்டைகள் ஏலத்திற்கு வந்தன.
மொத்தம், 75 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 9,702 ரூபாய்க்கும், அதிகபட்சம், 19,899 ரூபாய்க்கும் விற்பனையானது. உருண்டை ரகம் குறைந்தபட்சம், 10,022 ரூபாய்க்கும், அதிகபட்சம், 15,902 ரூபாய்க்கும் விற்பனையானது.
பனங்காலி ரகம் குறைந்தபட்சம், 6,099 ரூபாய்க்கும், அதிகபட்சம், 31,502 ரூபாய்க்கும் விற்பனையானது. விரலி, 850, உருண்டை, 350, பனங்காலி, 100 மூட்டை என, 1,300 மூட்டை மஞ்சள், 1.13 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. இரண்டு வாரங்களுக்கு பின் மஞ்சள் விலை மூட்டை, 20,000 ரூபாய்க்கு கீழே குறைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

