/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை
/
அரசு பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை
ADDED : ஜூன் 16, 2024 12:47 PM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் யூனியனுக்குட்பட்ட ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பருவமழை காலங்களில் மீட்பு பணிகள் குறித்து செயல்முறை விளக்க பயிற்சி நடந்தது. ராசிபுரம் தீயணைப்பு துறையினர் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, நிலைய அலுவலர் பலகார ராமசாமி தலைமை வகித்தார்.
இதில், பருவமழை காலங்களில் குளம், கிணறு, ஏரி, ஆறு, அணை போன்ற நீர் நிலைகளில் நீர் நிரம்பிய நிலையில், உயிர்களையும், உடமைகளையும் எவ்வாறு பாதுகாத்து கொள்வது; நீரில் மூழ்கியவர்களையும், நீரில் அடித்துச் செல்பவர்களையும் எவ்வாறு மீட்பது; தீ விபத்தின் போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து, செயல்முறை விளக்கம் அளித்தனர். மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.