/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிவன் கோவிலில் உடைந்த சிலைகளை ஒட்டவைத்து வழக்கு முடித்து வைப்பு
/
சிவன் கோவிலில் உடைந்த சிலைகளை ஒட்டவைத்து வழக்கு முடித்து வைப்பு
சிவன் கோவிலில் உடைந்த சிலைகளை ஒட்டவைத்து வழக்கு முடித்து வைப்பு
சிவன் கோவிலில் உடைந்த சிலைகளை ஒட்டவைத்து வழக்கு முடித்து வைப்பு
ADDED : ஆக 27, 2024 03:21 AM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த, புதுச்சத்திரம் யூனியன், மூணுசாவடியில் ஆவுடையப்பர் என்ற ஈஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. கடந்த, 19ல் இக்கோவிலின் சிலைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரித்து வந்தனர். அதில், மர்ம நர்கள் சிலைகளை உடைப்பதற்கு முன், அங்கு பொருத்தப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமராக்களை ஆப் செய்தது தெரியவந்தது. இதனால், சிலைகளை உடைத்த மர்ம நபர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதுகுறித்து, பா.ஜ., ஆன்மீக ஆலய மேம்பாட்டு பிரிவினர், எஸ்.பி., அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர். பா.ஜ.,வினர் இந்த வழக்கில் நுழைந்ததால், போலீசார் கோவில் நிர்வாகிகளை அழைத்து பேசினர். இதையடுத்து, உடைக்கப்பட்ட சுவாமி சிலையின் மூக்கை ஒட்டவைத்து, கருப்பு சாயம் பூசிவிட்டனர். பக்தர்கள் வழக்கம்போல் வழிபட தொடங்கிவிட்டனர்.
புதுச்சத்திரம் போலீசாரிடம் கேட்டபோது, 'வழக்கை முடித்துக்கொள்வதாக கோவில் நிர்வாகத்தினர் எழுதி கொடுத்துவிட்டனர்' என்றனர்.
கோவில் நிர்வாகி சுப்ரமணியிடம் பேசியபோது, ''ஆறு மாதத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. அப்போது உடைக்கப்பட்ட, ஐந்து சிலைகளையும் மாற்ற முடிவு செய்துள்ளோம். பா.ஜ.,வினர், மற்ற வழக்குகள் குறித்தும் பேசியதால், அவர்களை தவிர்க்க நினைத்தோம். மற்றபடி வழக்கை வாபஸ் பெறவில்லை,'' என்றார்.

