/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முன்னாள் முதல்வர் கருணாநிதி 6ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி
/
முன்னாள் முதல்வர் கருணாநிதி 6ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி
முன்னாள் முதல்வர் கருணாநிதி 6ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி
முன்னாள் முதல்வர் கருணாநிதி 6ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி
ADDED : ஆக 08, 2024 01:56 AM
நாமக்கல், நாமக்கல் மேற்கு, கிழக்கு, தெற்கு நகர தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதியின், 6ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, நாமக்கல் - மோகனுார் சாலை, அண்ணாதுரை சிலை அருகே நடந்தது. மாவட்ட தி.மு.க., அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாநில நிர்வாகிகள் வக்கீல் இளங்கோவன், நக்கீரன், நகராட்சி சேர்மன் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, நகர செயலாளர் சிவக்குமார், கவுன்சிலர்கள் சரவணன், விஜய்ஆனந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.
* குமாரபாளையம் வடக்கு, தெற்கு நகர, தி.மு.க., சார்பில், கருணாநிதியின், உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. வடக்கு, தெற்கு நகர பொறுப்பாளர்கள், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், ஞானசேகரன் தலைமை வகித்தனர். தொடர்ந்து மவுன ஊர்வலம் சென்றனர்.
* திருச்செங்கோடு நகர, தி.மு.க., சார்பில், பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள அண்ணாசிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, கருணாநிதியின் உருவ படத்திற்கு, தி.மு.க.,வினர் மலர் துாவி மரியாதை செலுத்தி, அமைதி பேரணி சென்றனர். நகர தி.மு.க., செயலாளர் கார்த்திகேயன், தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.