/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பணம் பறிக்கும் முயற்சியில் இலவச 'லேப்-டாப்' வதந்தி
/
பணம் பறிக்கும் முயற்சியில் இலவச 'லேப்-டாப்' வதந்தி
பணம் பறிக்கும் முயற்சியில் இலவச 'லேப்-டாப்' வதந்தி
பணம் பறிக்கும் முயற்சியில் இலவச 'லேப்-டாப்' வதந்தி
ADDED : ஏப் 26, 2024 03:57 AM
சென்னை: 'தமிழக மாணவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இலவசமாக லேப்டாப் தருவதாக பரவி வரும் 'வாட்ஸ் -ஆப்' புரளியை யாரும் நம்ப வேண்டாம்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் 2024' என்ற பெயரில், 'வாட்ஸ் -ஆப்' தளத்தின் மூலமாக லிங்க் பகிரப்பட்டு வருகிறது. இதில், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனிநபர்கள் சொந்தமாக லேப்டாப் வாங்க இயலவில்லை என்றால், அவர்களின் வாழ்க்கை மேம்பட இலவசமாக லேப்டாப் வழங்கப்படுகிறது. இதற்கான காலக்கெடு ஏப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது' என, கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் மாநில தலைமை அதிகாரி வினோத் குரியகோஸ் கூறுகையில், ''பொது சேவை மையம் போன்ற பெயரில் உலா வரும் போலியான குழு அல்லது நபர்களின் மூலம் பெறப்படும் எந்த ஒரு சேவைக்கும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். ''எந்த ஒரு செயலியையும், லிங்க்கையும் க்ளிக் செய்ய வேண்டாம். யாருக்கும் பகிர வேண்டாம். அதில் எக்காரணத்தை கொண்டும் உங்கள் தகவல்களை தர வேண்டாம்,'' என கேட்டுக் கொண்டுள்ளார்.

