/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விபத்தில் இறந்த பெண் போலீஸ் குண்டுகள் முழங்க இறுதி சடங்கு
/
விபத்தில் இறந்த பெண் போலீஸ் குண்டுகள் முழங்க இறுதி சடங்கு
விபத்தில் இறந்த பெண் போலீஸ் குண்டுகள் முழங்க இறுதி சடங்கு
விபத்தில் இறந்த பெண் போலீஸ் குண்டுகள் முழங்க இறுதி சடங்கு
ADDED : மே 03, 2024 02:46 AM
நாமகிரிப்பேட்டை:நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஆயில்பட்டியை சேர்ந்தவர் செல்வம் மனைவி அமுதா 46, இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இருவரும் கல்லுாரியில் படித்து வருகின்றனர். அமுதா நாமகிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு எளையம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தார். இரவு 10:00 மணிக்கு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.
கொமராபாளையம் பகுதியில் வரும்போது திருச்செங்கோடு நோக்கி சென்ற வேன் அமுதா மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நேற்று அமுதா உடலுக்கு ஆயில்பட்டியில் நாமக்கல் கலெக்டர் உமா அஞ்சலி செலுத்தினார். போலீசார் வானத்தை நோக்கி 27 முறை துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தினர்.