sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பசுந்தீவனம் உற்பத்தி: 5 நாள் இலவச பயிற்சி

/

பசுந்தீவனம் உற்பத்தி: 5 நாள் இலவச பயிற்சி

பசுந்தீவனம் உற்பத்தி: 5 நாள் இலவச பயிற்சி

பசுந்தீவனம் உற்பத்தி: 5 நாள் இலவச பயிற்சி


ADDED : செப் 15, 2024 03:01 AM

Google News

ADDED : செப் 15, 2024 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: 'வேளாண் அறிவியல் நிலையத்தில், 'பசுந்தீவன உற்பத்தி' குறித்து இலவச பயிற்சி முகாம், வரும், 19ல் துவங்கி, ஐந்து நாட்கள் நடக்கிறது' என, அதன் தலைவர் வேல்முருகன் தெரிவித்-துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், 'பசுந்தீவன உற்பத்தி மற்றும் பதப்படுத்-துதல்' என்ற தலைப்பில், இலவச பயிற்சி முகாம், வரும், 19ல் துவங்கி, 23 வரை, ஐந்து நாட்கள் இலவச பயிற்சி முகாம் நடக்கி-றது. காலை, 10:00 முதல், மாலை, 4:00 மணி வரை நடக்கும் முகாமில், பசுந்தீவனங்களின் வகைகள், அதில் உள்ள சத்துக்கள், இறவை, மானாவாரிக்கு உகந்த தீவனப்பயிர்கள் (விதை உறக்கம் அதை நிவர்த்தி செய்தல்), தானிய வகை, புல்வகை, பயறுவகை மற்றும் மரவகை தீவனப்பயிர்கள்.சாகுபடி முறைகள், ஊறுகாய் புல் தயாரித்தல், உலர்தீவனம் உற்பத்தி செய்தல், மண்ணில்லா பசுந்தீவனம் உற்பத்தி, அசோலா உற்பத்தி செய்தல், கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கொடுக்கும் அளவுகள், தீவன பயிர்களில் விதை உற்பத்தி செய்தல் குறித்து விளக்கப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்-றிதழ் வழங்கப்படும். முதலில் வரும், 25 பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில் விவசாயிகள், விவசாயம் சார்ந்த பணியா-ளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

விருப்பமுள்ளோர், 04286-266345, 9597746373, 7010580683 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us