ADDED : ஆக 04, 2024 01:44 AM
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை: தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, வரும், 7ல் சூரியம்பாளையம், செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து திருமண மண்டபத்தில், சிறப்பு கைத்தறி கண்காட்சி நடக்கிறது. அதில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி துணி ரகங்களான ராசிபுரம் பட்டு சேலைகள், இளம்பிள்ளை, ஆர்.புதுப்பாளையம் பருத்தி சேலைகள், காட்டன் கோர்வை சேலைகள் கைத்தறி வேட்டி ரகங்கள், கைத்தறி துண்டுகள், பவானி ஜமுக்காளம், பெட்சீட், கால்மிதி ஆகிய ரகங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
அனைவரும் இக்கண்காட்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் அரசு மருத்துவமனைகளில் இருந்து பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், எலும்பு முறிவு சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ முகாம் நடக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.