/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பள்ளி சமையல் கூடத்தில் மனித கழிவை பூசி அட்டூழியம்
/
அரசு பள்ளி சமையல் கூடத்தில் மனித கழிவை பூசி அட்டூழியம்
அரசு பள்ளி சமையல் கூடத்தில் மனித கழிவை பூசி அட்டூழியம்
அரசு பள்ளி சமையல் கூடத்தில் மனித கழிவை பூசி அட்டூழியம்
ADDED : செப் 03, 2024 02:34 AM
எருமப்பட்டி: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி டவுன் பஞ்., 6வது வார்டு அம்பேத்கர் நகரில், அரசு துவக்கப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில், 1 முதல், 5ம் வகுப்பு வரை, 150க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளியின் சுற்றுச்சுவர் உயரம் குறைவாகவும், பல இடங்களில் இடிந்தும் உள்ளதால், விடுமுறை நாட்களில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து, தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதை பயன்படுத்திய சமூக விரோதிகள், பள்ளிக்குள் சென்று சுவற்றிலும், சமையலறையின் பூட்டிலும், மனித கழிவை பூசி அட்டூழியம் செய்துள்ளனர். மேலும், மனித கழிவால் ஆபாச வார்த்தைகளை எழுதி வைத்துள்ளனர்.
நேற்று காலை, பள்ளியில் காலை உணவு தயாரிக்க சென்ற சமையலர், மனித கழிவு பூசியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தார். இதையறிந்த மாணவர்களின் பெற்றோர், அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வட்டார கல்வி அலுவலர் அருண் கூறுகையில், ''வெளிநபர்கள் விடுமுறை நாட்களில் வந்து, இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, கலெக்டர் போனில் பேசினார். பின், போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளோம்,'' என்றார்.