/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல், மோகனுாரில் பயங்கர வெடி சத்தம் பீதியில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

ADDED : மே 16, 2024 04:32 AM
நாமக்கல்: நாமக்கல், மோகனுார் பகுதியில் பயங்கர வெடி சத்தம் கேட்டதால், நிலநடுக்கம் ஏற்பட்டதாக நினைத்து பீதியடைந்த பொதுமக்கள், வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து நின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் நகரில், நேற்று காலை, 11:44 மணிக்கு, பயங்கர வெடி சத்தம் கேட்டது. இந்த அதிர்வு, அணியாபுரம், மோகனுார், எஸ்.வாழவந்தி, ப.வேலுார் உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் உணரப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், நிலநடுக்கம் ஏற்பட்டதாக நினைத்து, வீடுகளில் இருந்து அலறியடித்து வெளியே ஓடிவந்தனர்.
'சூப்பர் சோனிக்' என அழைக்கப்படும் போர் விமானம், வானில் சென்றதால் இந்த சத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 'சூப்பர் சோனிக்' ஜெட் விமானம், காற்றின் ஒலியைவிட வேகமாக செல்லக்கூடியது. அவ்வாறு செல்லும்போது, பயங்கர சத்தம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சத்தம் தொடர்பாக, வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 2020, 2021, 2023ல் 15க்கும் மேற்பட்ட முறை இதுபோன்ற சத்தம் உணரப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சத்தத்தை உணர்ந்ததால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.