/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேந்தமங்கலம் அரசு கல்லுாரியில் 8 ஆய்வக கட்டடங்கள் திறப்பு விழா
/
சேந்தமங்கலம் அரசு கல்லுாரியில் 8 ஆய்வக கட்டடங்கள் திறப்பு விழா
சேந்தமங்கலம் அரசு கல்லுாரியில் 8 ஆய்வக கட்டடங்கள் திறப்பு விழா
சேந்தமங்கலம் அரசு கல்லுாரியில் 8 ஆய்வக கட்டடங்கள் திறப்பு விழா
ADDED : ஜூலை 18, 2024 01:12 AM
சேந்தமங்கலம், : சேந்தமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், எட்டு ஆய்வக கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின், காணொ-லியில் திறந்து வைத்தார்.
சேந்தமங்கலம் அருகே, பேளுக்குறிச்சி கணவாய் மேட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இக்-கல்லுாரியில், காமராஜர் கல்லுாரி மேம்பாட்டு திட்டத்தில், 3.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக எட்டு ஆய்வக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களை தலைமை செயல-கத்தில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் காணொலியில், கடந்த, 16ல் திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து, கல்லுாரியில் நடந்த குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் பாரதி தலைமை வகித்தார். இதில், தர்மபுரி மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் சிந்-தியா செல்வி, குத்துவிளக்கேற்றி ஆய்வகங்களை மாணவ, மாண-வியரின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். கணிதத்துறை தலைவர் செந்தில்குமரன், தமிழ்மன்ற தலைவர் தமிழரசி, ஆங்கி-லத்துறை தலைவர் சத்தியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.