/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை அதிகரிப்பு
/
ராசிபுரம் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை அதிகரிப்பு
ராசிபுரம் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை அதிகரிப்பு
ராசிபுரம் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை அதிகரிப்பு
ADDED : ஆக 04, 2024 03:32 AM
ராசிபுரம்: ராசிபுரம் தாலுகாவில், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வெண்-ணந்துார், புதுச்சத்திரம் ஒன்றியங்களில் உள்ள விவசாயிகள் தங்க-ளது விளைபொருட்களை, ராசிபுரம் உழவர் சந்தையில் விற்பனை செய்து செல்கின்றனர். ஆடிப்பெருக்கான, நேற்று அதிகாலை முதல் விற்பனை பரபரப்பாக இருந்தது. காலை, 4:00 மணிக்கு உழவர்சந்தை திறப்பதற்கு முன்பாகவே விவசாயிகள், பொது-மக்கள் அதிகளவு வரத்தொடங்கினர்.
நேற்று உழவர் சந்தைக்கு, 195 விவசாயிகள் தங்களது விலை பொருட்களை விற்க கொண்டு வந்திருந்தனர். 19.13 டன் காய்கறி-களை கொண்டு வந்திருந்தனர். பழங்கள், 4.6 டன், 230 கிலோ பூக்கள் என மொத்தம், 23.980 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு, 9.60 லட்சம் ஆகும். பொதுமக்கள், 4,675 பேர் வந்திருந்தனர். வழக்கத்தை விட ஆடிப்பெருக்கான நேற்று, 2 டன் அளவிற்கு காய்கறிகள் அதிகம் விற்பனையாகியுள்ளது.
நேற்று தக்காளி கிலோ, 28, கத்தரி, 70, வெண்டை, 24, புடலை, 30, பீர்க்கன், 32, பாகல், 70, சுரைக்காய், 15, பூச-ணிக்காய், 35, அவரை, 70, பச்சை மிளகாய், 80, தேங்காய், 32, சின்ன வெங்காயம், 45, பெரிய வெங்காயம், 45, உருளை, 50, கேரட், 130 ரூபாயக்கு விற்பனையானது.