/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்
/
தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்
தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்
தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்
ADDED : ஜூன் 04, 2024 04:06 AM
நாமக்கல்: தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், நேற்று, தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தால், அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் விற்பனையாளர்கள், தினமும் சந்திக்கும் இன்னல்களை, முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், மாநிலம் முழுதும், நேற்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில், இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பெரும்பாலான தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூடப்பட்டிருந்தன. அதேபோல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் நிர்வகிக்கப்படும் ரேஷன் கடைகளும் மூடப்பட்டிருந்தன. அதனால், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும், தினமும் மேற்கொள்ளப்படும் சேவைகள் பாதிக்கப்பட்டன.
ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள, 169 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 110 சங்கங்கள் மூடப்பட்டன. மொத்தம் உள்ள, 570 பணியாளர்களில், 415 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர்.