/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் ஓட்டுப்பதிவு துவக்கம்
/
முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் ஓட்டுப்பதிவு துவக்கம்
முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் ஓட்டுப்பதிவு துவக்கம்
முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் ஓட்டுப்பதிவு துவக்கம்
ADDED : ஏப் 06, 2024 02:19 AM
நாமக்கல்:நாமக்கல்லில், முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று, தபால் ஓட்டுப்பதிவு பெறும் பணி துவங்கியது.
நாமக்கல் லோக்சபா தொகுதியில், வரும், 19ல், ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம், 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டுப்போட வாய்ப்பளித்துள்ளது. அதன்படி, நாமக்கல் லோக்சபா தொகுதியில், 85 வயதிற்கு மேற்பட்ட, 4,113 பேர், 40 சதவீதம் அதற்கு மேல் உடல் பாதிப்பிற்குள்ளான மாற்றுத்திறனாளிகள், 2,546 பேர் என, மொத்தம், 6,659 வாக்காளர்கள், வீட்டிலிருந்தபடியே ஓட்டுப்போட விருப்பம் தெரிவித்து, அதற்கான, '12டி' படிவம் வழங்கி உள்ளனர்.
அதனடிப்படையில், முதற்கட்டமாக, தபால் ஓட்டுப்போட விருப்பம் தெரிவித்த முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கு நேரில் சென்று, ஓட்டுப்பதிவு பெறும் பணி, நாமக்கல் மாவட்டத்தில் நேற்று துவங்கியது. இப்பணியில், அதற்காக நியமனம் செய்யப்பட்ட, 130 மண்டல அலுவலர்கள் தலைமையில், ஓட்டுப்பதிவு குழு மூலம், '12டி' படிவம் கொடுத்த வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று தபால் ஓட்டுப்பதிவு பெறப்பட்டது. இப்பணி, இன்றும் நடக்கிறது. இந்த இரண்டு நாட்களில் தபால் ஓட்டுப்பதிவு செலுத்த தவறிய வாக்காளர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பளித்து, வரும், 8ல் மீண்டும் அவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று, தபால் ஓட்டுக்களை பெற உள்ளனர்.
தேர்தல் அலுவலர்கள் செல்லும் பகுதியில் உள்ள மூத்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே தகவல் தரப்பட்டுள்ளது. அதன்படி, போலீஸ் பாதுகாப்புடன், தேர்தல் அலுவலர்கள் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று, தபால் ஓட்டுகளை ஓட்டு பெட்டியில் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

