/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கூட்டு குடிநீர் திட்டத்தில் பைப் பதிக்கும் பணி தீவிரம்
/
கூட்டு குடிநீர் திட்டத்தில் பைப் பதிக்கும் பணி தீவிரம்
கூட்டு குடிநீர் திட்டத்தில் பைப் பதிக்கும் பணி தீவிரம்
கூட்டு குடிநீர் திட்டத்தில் பைப் பதிக்கும் பணி தீவிரம்
ADDED : ஏப் 16, 2024 01:55 AM
நாமகிரிப்பேட்டை;ராசிபுரம், வெண்ணந்துார், நாமகிரிப்பேட்டை ஒன்றியங்களில் உள்ள கிராமங்கள் மற்றும் ராசிபுரம் நகரம், பட்டணம், ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, பிள்ளாநல்லுார், நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., உள்ளிட்ட பகுதிகளுக்கு, 850 கோடி ரூபாய் செலவில் கூட்டு குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதற்கான பணி கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிவிட்டது. கீழ் நிலைத்தொட்டி, மேல்நிலைத்தொட்டி அமைக்கும் பணிகள் பல இடங்களில் முடிந்துவிட்டது. சில இடங்களில் முடியும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில் வரும் ஜன., மாதத்திற்குள் திட்டத்தை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தற்போது இப்பணி வேகமாக நடந்துவருகிறது. ஊராட்சி கிராமங்களில் சிறிய எச்.டி.பி.இ., ரக பைப்புகள் அமைக்கப்படுகிறது.
அதேபோல் பிரதான நகர்களுக்கு பெரிய, சிமென்ட் பைப்புகள் சாலையோரம் பதிக்கும் பணி நடந்து வருகிறது. நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்திற்கு பிரதான குடிநீர் குழாய் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இப்பணி இன்னும் சில வாரங்களில் முடிந்துவிடும். தற்போது, பைப் அமைக்கும் பணியால் அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

