/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
/
அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
ADDED : செப் 02, 2024 03:14 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை பஞ்., அ.தி.மு.க., உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கமணி, அனைவருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:தி.மு.க.,வினர் செல்லும் இடமெல்லாம் அத்துமீறல். ஓட்டல் கடையில் சாப்பிட்டு விட்டு, பணம் கேட்டால் கொலை செய்கின்-றனர். கொலை, கொள்ளை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. போதை பொருட்கள் நடமாட்டம்
அதிகரித்துள்ளது. தாலிக்கு தங்கம், லேப்டாப், டூவீலர்கள் போன்ற திட்டங்கள் நிறுத்தி விட்-டனர். இதெல்லாம் சிறிது காலம் தான். அடுத்து வரும், 2026 சட்-டசபை தேர்தலில் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். அடுத்த
ஆட்சி, அ.தி.மு.க., ஆட்சி அமைய அயராது பாடுபட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.வடக்கு, தெற்கு ஒன்றிய செயலர்கள் செந்தில், குமரேசன், தட்-டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா, முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.