/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சம்பிரதாயத்திற்கு கருத்து கேட்பது ஏற்புடையதல்ல: வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் குற்றச்சாட்டு
/
சம்பிரதாயத்திற்கு கருத்து கேட்பது ஏற்புடையதல்ல: வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் குற்றச்சாட்டு
சம்பிரதாயத்திற்கு கருத்து கேட்பது ஏற்புடையதல்ல: வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் குற்றச்சாட்டு
சம்பிரதாயத்திற்கு கருத்து கேட்பது ஏற்புடையதல்ல: வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் குற்றச்சாட்டு
ADDED : மார் 11, 2025 07:02 AM
நாமக்கல்: ''தமிழக வேளாண் பட்ஜெட் தயாரித்த பின், விவசாயிகளிடம் சம்பிரதாயத்திற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது ஏற்புடையதல்ல,'' என, இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் (சிபா), மாநில தலைவர் விருத்திகிரி, பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.
மத்திய அரசு போல்...
இதுகுறித்து, மேலும் அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில், வரும், 15ல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக, மாவட்டந்தோறும், விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. தற்போது, விவசாயிகள் கூறும் கருத்துக்களை, பட்ஜெட்டில் சேர்க்க முடியாது. காரணம், அதற்கான கால நேரம் இல்லை. மத்திய அரசு போல், ஆறு மாதத்திற்கு முன்பே கருத்து கேட்பு கூட்டம் நடத்தியிருக்க வேண்டும். 'என் புருசன் கச்சேரிக்கு போரான்' என்பது போல், ஏற்கனவே பட்ஜெட் புத்தகம் தயாரித்து வைத்துவிட்டு, சம்பிரதாயத்திற்காக கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது ஏற்புடையதல்ல. இருந்தும், எங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளோம்.
அதன்படி, நெல் கொள்முதல் செய்யும்போது, மத்திய அரசு அறிவிக்கின்ற, எம்.எஸ்.பி.,யுடன், மாநில அரசு அறிவிக்கின்ற ஊக்கத்தொகையும் சேர்த்து, ஒரே தவணையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
ஒரே தவணையில்
அதேபோல், கரும்பு கொள்முதல் செய்யும்போது, சர்க்கரை ஆலைகள் வழங்கும் விலையோடு, தமிழக அரசு அறிவிக்கும் சிறப்பு ஊக்கத்தொகையும் ஒரே தவணையில் வரவு வைக்க வேண்டும். கரும்பு உற்பத்தி அதிகரித்தால், தமிழக அரசுக்கு நேர்முகமாக, சர்க்கரை ஆலைகள் மூலமாக, சர்க்கரை - எரிசாராயம் - எத்தனால் - கரும்பு சக்கை இவற்றின் மூலம் வரி வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அதனால், கரும்பு உற்பத்தியை பெருக்க கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 15,000 ரூபாய் நடவு மானியம் வழங்க வேண்டும். 2024-25ல், மூன்று லட்சத்து, 16,666 ஏக்கர் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. மானியம் வழங்கினால், 2025-26 பருவத்தில், ஐந்து லட்சம் ஏக்கராக கரும்பு பயிரிடும் பரப்பளவு உயர வாய்ப்புள்ளது. மத்திய அரசு, 2024-25 பருவத்திற்கு, கரும்பு விலை, 3,400 ரூபாய் மெ.டன் என அறிவித்திருந்தாலும், தட்ப வெட்பம் மற்றும் சர்க்கரை கட்டுமானம் குறைவு போன்ற காரணங்களால், தமிழக கரும்பு விவசாயிகள், டன் ஒன்றுக்கு, 3,151 ரூபாய் மட்டுமே பெறுகின்றனர்.
உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா மாநில அரசுகள், கரும்பு விவசாயிகளுக்கு, 3,800 ரூபாய் வழங்குகின்றனர். இதேபோல் ஹரியானா, 4,000 ரூபாய், பஞ்சாப், 4,100 ரூபாய் வழங்குகிறது. இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசு கரும்பு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், டன் ஒன்றுக்கு, 600 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.