ADDED : மே 18, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: வெண்ணந்துார் யூனியனுக்குட்பட்ட பகுதிகளில், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின், மதியம், 12:00 மணியளவில் தொடங்கிய மழை, அரை மணி நேரம் கொட்டி தீர்த்தது.
இதில், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. தற்போது, வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. கோடை மழைக்காக காத்திருந்த விவசாயிகள், பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

