/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மூன்று நாட்களுக்கு பின் 18ல் மீண்டும் ஜமாபந்தி
/
மூன்று நாட்களுக்கு பின் 18ல் மீண்டும் ஜமாபந்தி
ADDED : ஜூன் 16, 2024 12:54 PM
ராசிபுரம்: ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில், பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி கடந்த, 11ல் கலெக்டர் உமா தொடங்கி வைத்தார். 11 முதல், 14 வரை தொடர்ந்து பல்வேறு கிராமங்களுக்கான ஜமாபந்தி நடந்தது.
குறிப்பிட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல், உட்பிரிவு உள்ள பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மின்னணு குடும்ப அட்டை உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். இதனால், தினமும் தாலுகா அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை பக்ரீத் விடுமுறை என்பதால் மீண்டும் ஜமாபந்தி, 3 நாட்களுக்கு பின், 18ல் நடக்கவுள்ளது. 18ல் அலவாய்ப்பட்டி, அத்தனுார், மதியம்பட்டி, மலையம்பாளையம், சர்க்கார் மின்னக்கல், மின்னக்கல் அக்ரஹாரம், வெண்ணந்துார், தேங்கல்பாளையம், கட்டனாச்சம்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 20ல் கீரனுார், கொமாரபாளையம், நடுப்பட்டி, ஓ.சவுதாபுரம், பழந்தின்னிப்பட்டி, கல்லாங்குளம், ஆர்.புதுப்பாளையம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடக்கவுள்ளது.