/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'நாணயத்தின் இரு பக்கமாக நீதிபதி, வக்கீல் திகழணும்'
/
'நாணயத்தின் இரு பக்கமாக நீதிபதி, வக்கீல் திகழணும்'
'நாணயத்தின் இரு பக்கமாக நீதிபதி, வக்கீல் திகழணும்'
'நாணயத்தின் இரு பக்கமாக நீதிபதி, வக்கீல் திகழணும்'
ADDED : ஆக 26, 2024 04:44 AM

நாமக்கல: ''நாணயத்தின் இரு பக்கங்கள் போல், நீதிபதிகளும், வக்கீல்களும் திகழ வேண்டும்,'' என, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் பேசினார்.
நாமக்கல்லில் மோட்டார் வாகன விபத்து கோரிக்கை தீர்ப்பாய நீதிமன்றம், திருச்செங்கோடு கூடுதல் சார்பு நீதிமன்றம் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் பேசியதாவது:
பல்வேறு வழக்குகளில் விரைவாக தீர்ப்பு வழங்கவும், நிவாரணம் கிடைக்கவும் வக்கீல்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம். சமுதாயத்துக்கு கடமைப்பட்ட நீதிபதிகள், தங்கள் பொறுப்பை உணர்ந்தும், வக்கீல்கள் ஒத்துழைப்போடும் உரிய காலத்தில் வழக்குகளை முடிக்க வேண்டும். பாகப்பிரிவினை, விபத்து உள்ளிட்ட வழக்குகளில் வழக்காடிகள் மற்றும் அவரது குடும்ப நிலையை உணர்ந்து உரிய நீதி, நிவாரணத்தை உரிய காலத்தில் வழங்க வேண்டும். நாணயத்தின் இரு பக்கங்கள் போல் நீதிபதிகளும், வக்கீல்களும் திகழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளும், நாமக்கல் மாவட்ட பொறுப்பு நீதிபதிகளுமான அப்துல் குத்துாஸ், ஜஸ்டிஸ் முகமது சபீக், நாமக்கல் கலெக்டர் உமா, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் சிறப்புரையாற்றினர்.

