/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு பாராட்டு
/
100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஆக 02, 2024 01:28 AM
நாமக்கல், நாமக்கல், அரசு பள்ளியில் ஒவ்வொரு மாதமும், 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
நாமக்கல், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆறு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், பள்ளிக்கு தொடர்ந்து வருகை தரவும், அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு மாதமும் பள்ளிக்கு, 100 சதவீதம் வருகை புரியும் ஆறு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், பரிசும் வழங்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்தது.
அதன் அடிப்படையில், நேற்று பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் சீனிவாசராகவன் தலைமை வகித்து, கடந்த ஜூலை மாதத்தில், 100 சதவீதம் பள்ளிக்கு வருகை புரிந்த, 81 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பேனா வழங்கினார்.