/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருநங்கைகள் கட்டிய அம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
/
திருநங்கைகள் கட்டிய அம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
திருநங்கைகள் கட்டிய அம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
திருநங்கைகள் கட்டிய அம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : செப் 16, 2024 02:54 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, திருநங்கைகள் கட்டிய அம்மன் கோவிலுக்கு, இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது.
நாமகிரிப்பேட்டை அடுத்த அரியாகவுண்டம்பட்டி பனந்தோப்பில் திருநங்கைகள் சார்பில், அங்காளம்மன், கருப்பனார் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. கடந்த, 6ல் முகூர்த்தகால் நடுதலுடன் விழா தொடங்கியது. அன்றே முளைப்பாரி போட்டனர். நேற்று காலை மேளதாளத்துடன் கோபுர கலசத்திற்கு புனித தீர்த்தம், முளைப்பாரி ஆகியவை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். நேற்று இரவு கோபுர கலசம் வைத்தல், மந்திர ஸ்தாபனம், மருந்து சாற்றுதல் ஆகியவை நடந்தது. இன்று காலை, 4:00 மணிக்கு மங்கள இசை, விநாயகர் பூஜை, நாடி சந்தானம் ஆகியவை நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர், நெய், பழ வகைகள், பட்டுத்துணி, நவதான்யம் ஆகியவை, கோவிலில் வழங்க விழாக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

