/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குறிஞ்சி அகாடமி 'நீட்' தேர்வில் முதலிடம்
/
குறிஞ்சி அகாடமி 'நீட்' தேர்வில் முதலிடம்
ADDED : ஜூன் 08, 2024 02:59 AM
நாமக்கல்: நாமக்கல் - பரமத்தி சாலை, காவேட்டிப்பட்டியில் உள்ள குறிஞ்சி கல்வி நிறுவனத்தில், குறிஞ்சி, 'நீட்' அகாடமி செயல்பட்டு வருகிறது. அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம், ஓராண்டு, 'நீட்' பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்தாண்டு, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற இளநிலை மருத்துவ படிப்பிற்காக நடந்த, 'நீட்' நுழைவு தேர்வில், இப்பயிற்சி மையத்தை சேர்ந்த, 200-க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர்.
இதில் மாணவர்கள் அனுசியா, ரதீஷ் ஆகியோர், 720க்கு, 655 மதிப்பெண் பெற்றனர். அரசு பள்ளியில் படித்து, 'நீட்' தேர்வெழுதிய மாணவர்களில் மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், 'நீட்' அகாடமியில் முதலிடத்தையும் பெற்றனர். மாணவி ஹரிணிஸ்ரீ, 720க்கு, 617 மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாமிடமும், மாணவர் தீரஜ்ஷாம், 720க்கு, 606 மதிப்பெண் பெற்று, பள்ளியில் மூன்றாமிடமும் பிடித்துள்ளனர். இப்பயிற்சி மையத்தில் படித்த, 30 பேர், அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை குறிஞ்சி, 'நீட்' பயிற்சி மைய தாளாளர் தங்கவேல், இயக்குனர்கள் பாராட்டி பரிசு வழங்கினர். அட்மிஷன் தொடர்புக்கு, 9344567484 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.