/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேர்தல் புகார் தெரிவிக்க 'சி விஜில்' செயலி அறிமுகம்
/
தேர்தல் புகார் தெரிவிக்க 'சி விஜில்' செயலி அறிமுகம்
தேர்தல் புகார் தெரிவிக்க 'சி விஜில்' செயலி அறிமுகம்
தேர்தல் புகார் தெரிவிக்க 'சி விஜில்' செயலி அறிமுகம்
ADDED : மார் 24, 2024 01:26 AM
நாமக்கல் 'வாக்காளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த புகார்களை தெரிவிக்க, 'சி விஜில்' என்ற 'ஸ்மார்ட்போன்' செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது' என, நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த புகார்களை தெரிவிக்க, 'சி விஜில்' என்ற, 'ஸ்மார்ட்போன்' செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை தேவைப்படுபவர்கள், தங்களது, 'ஸ்மார்ட் போனில்' பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தேர்தல் விதிமுறைகள் குறித்து தாங்கள் ஏதேனும் விதிமீறல்களை கண்டால், அவற்றை, 'சி விஜில்' செயலியில் உள்ள பட்டனை அழுத்தி புகைப்படமாகவோ அல்லது வீடியோவாகவோ நேரடியாக பதிவு செய்து, பதிவேற்றம் செய்யவேண்டும்.
இந்த புகார், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில், 'சி விஜில்' கண்காணிப்பு குழுவினருக்கு புகார் தெரிவித்த இடத்தின் முழு விபரத்தோடு கிடைக்கும். அந்த புகார், சம்பந்தப்பட்ட பகுதியில் பணியில் ஈடுபட்டிருக்கும் பறக்கும் படையினருக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று புகாரின் மீது உரிய நடவடிக்கை, 100 நிமிடங்களுக்குள் மேற்கொள்ளப்படும்.
இந்த நடவடிக்கையை, தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் பார்வையாளர், தலைமை தேர்தல் அலுவலர் ஆகியோர், இந்த செயலியின் மூலமே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செயலியை பதிவிறக்கம் செய்யும்போதே, தங்களது மொபைல் எண்ணை பதிவு செய்திருந்தால், சம்பந்தப்பட்ட நபருக்கு தீர்வு, 'ஸ்மார்ட்' போனிலேயே வந்து சேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

