/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மனைவியை எரித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை
/
மனைவியை எரித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை
ADDED : மார் 06, 2025 01:26 AM

நாமக்கல்:வரதட்சணை கேட்டு மனைவியை எரித்துக் கொன்ற கணவனுக்கு, ஆயுள் தண்டனை விதித்து, நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுாரை அடுத்த சோழசிராமணி, படவெட்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம், 46; மீன்பிடித் தொழிலாளி.
இவரது மனைவி சுகன்யா, 23, என்பவரை, வரதட்சணை கேட்டு முருகானந்தம் கொடுமை செய்து வந்தார்.
கடந்த, 2016 அக்., 6ம் தேதி இரவு, முருகானந்தம் சாப்பாடு கேட்டதால், சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் அடுப்பை சுகன்யா பற்ற வைத்தார்.
அப்போது மீண்டும் தகராறு ஏற்படவே, பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெயை சுகன்யா மீது ஊற்றியதில், உடலில் தீப்பற்றியது.
சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுகன்யா நான்கு நாட்கள் சிகிச்சைக்குப் பின் இறந்தார். ஜேடர்பாளையம் போலீசார் முருகானந்தத்தை கைது செய்தனர்.
நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், முருகானந்தத்துக்கு ஆயுள் தண்டனை, 15,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சாந்தி நேற்று தீர்ப்பளித்தார்.