/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆசிரியர்களுக்கு எழுத்தறிவு திட்ட பயிற்சி வகுப்பு
/
ஆசிரியர்களுக்கு எழுத்தறிவு திட்ட பயிற்சி வகுப்பு
ADDED : ஜூலை 26, 2024 03:03 AM
நாமக்கல்: நாமக்கல்லில், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு எழுத்த-றிவு திட்ட பயிற்சி வகுப்பு நேற்று அளிக்கப்பட்டது.
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2024-25 என்ற தலைப்பில், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, நாமக்கல் எண்ணும், எழுத்தும் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று
நடந்தது.
பயிற்சி வகுப்பை உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். கருத்தாளர்கள் ரேவதி, செல்வராணி ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் பயிற்சி பெறும் ஆசிரியர்கள், பயிற்று-னர்கள், மாவட்டம் முழுவதும் உள்ள தன்னார்வலர்களுக்கு புதிய எழுத்தறிவுத் திட்ட பயிற்சியை வழங்குவார்கள் என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

