ADDED : ஜூலை 28, 2024 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்:மின் கட்டணத்தை உயர்த்தி, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால், சிறுகுறு, நடுத்தர தொழில்கள் கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படும். எனவே, தமிழக அரசு மின்கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். மத்திய அரசு, தமிழகத்தில் அமல்படுத்த உள்ள, 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை கைவிட்டு, மாதந்தோறும் மின்கட்டணத்தை வசூல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று மாலை, 6:00 மணிக்கு, மல்லசமுத்திரம் யூனியன், வையப்பமலை மின்வாரிய அலுவலகம் முன், மா.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் பலர் கலந்து கொண்டனர்.

