/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மெத்தனால், மொலாசஸ் விற்றால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
/
மெத்தனால், மொலாசஸ் விற்றால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
மெத்தனால், மொலாசஸ் விற்றால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
மெத்தனால், மொலாசஸ் விற்றால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
ADDED : ஜூலை 04, 2024 11:03 AM
நாமக்கல்: ''மெத்தனால், மொலாசஸ் உள்ளிட்ட வேதிப்பொருள் திரவங்களை, அனுமதிக்கப்பட்ட அளவை தவிர்த்து, சட்ட விரோதமாக பயன்படுத்துவது, விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்தார்.
குமாரபாளையம் நகராட்சி, சேசாய் பேப்பர் மற்றும் போர்ட் நிறுவனத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஏழு லட்சத்து, 84,750 கி.லி., மெத்தனால் கொள்முதல் செய்ய உரிமம் வழங்கப்பட்டு, 50,000 கி.லி., இருப்பு வைக்கப்பட்டுள்ளதையும், முறையாக உரிமம் பெறப்பட்டுள்ளதையும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, ஓடப்பள்ளி அக்ரஹாரத்தில் செயல்பட்டு வரும் பொன்னி சர்க்கரை ஆலையில், மொலாசஸ் (12,600 லிட்டர்) மற்றும் ஆர்.சி., 2-2 (2,500 லிட்டர்) உள்ளிட்டவற்றுக்கு, அளவுள்ள உரிமங்கள் பெறப்பட்டுள்ளதையும், அவற்றின் இருப்பு மற்றும் பயன்பாடு குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது, மெத்தனால், மொலாசஸ் உள்ளிட்ட வேதிப்பொருள் திரவங்களை, அனுமதிக்கப்பட்ட அளவை தவிர்த்தும், குறிப்பிட்ட பயன்பாடுகள் தவிர்த்தும் சட்ட விரோதமாக பயன்படுத்துவது மற்றும் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், கள்ளச்சாராயம், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் போதை மருந்துகள், அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்து மது விற்பனை சம்பந்தமான தகவல்களை வாட்ஸாப் எண்: 88383 52334 எண்ணிற்கும், '10581' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம் என, தெரிவித்தார்.