/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கரூர் தொழிலாளியை கொடூரமாக தாக்கிய மோகனுார் பண்ணை உரிமையாளர் கைது
/
கரூர் தொழிலாளியை கொடூரமாக தாக்கிய மோகனுார் பண்ணை உரிமையாளர் கைது
கரூர் தொழிலாளியை கொடூரமாக தாக்கிய மோகனுார் பண்ணை உரிமையாளர் கைது
கரூர் தொழிலாளியை கொடூரமாக தாக்கிய மோகனுார் பண்ணை உரிமையாளர் கைது
ADDED : ஜூன் 30, 2024 02:17 AM
நாமக்கல், தொழிலாளியை கட்டி வைத்து தாக்கிய, கோழிப்பண்ணை உரிமையாளர், மேலாளரை, போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் ஜெகதாபி, வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிமேகலை, 33; கணவர் மாரிமுத்து, 43; இவர்களுக்கு இரு பெண் குழந்தை உள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனுாரை அடுத்த கணவாய்பட்டியில், சின்னசாமி, 62, என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில், இரண்டாண்டாக கூலி வேலை செய்தனர். வேலைக்கு தகுந்த சம்பளம் வழங்காததால், மூன்று மாதங்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பினர். நான்கு நாட்களுக்கு முன், முட்டை வண்டிக்கு செல்வதாக மாரிமுத்து சென்றார்.
மூன்று நாட்கள் மொபைல்போனில் மனைவியிடம் பேசிய மாரிமுத்து, 27ம் தேதி முதல் பேசவில்லை. அன்றிரவு மணிமேகலையின் மொபைல்போனுக்கு ஒரு வீடியோ வந்தது. மாரிமுத்துவை கட்டி வைத்து கொடுமைப்படுத்தும் காட்சி இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
நேற்று முன்தினம் காலை, கோழிப்பண்ணை உரிமையாளர் சின்னசாமி, அவரது மனைவி கலாராணி, மேலாளர் கிஷோர், அடையாளம் தெரியாத வட மாநிலத்தை சேர்ந்தவர் என நான்கு பேர், மாரிமுத்துவை கயிற்றில் கட்டி இழுத்து வந்து, மணிமேகலையின் அம்மா வீட்டில் வைத்து தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வெள்ளியணை போலீசில் புகார் தரப்பட்ட நிலையில், நடவடிக்கை இல்லாததால், கரூர் எஸ்.பி., அலுவலகத்தில், மணிமேகலை மனு கொடுத்தார். அவர்களின் அறிவுரைப்படி, மோகனுார் போலீசில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் சின்னசாமி, மேலாளர் கிஷோரை போலீசார் கைது செய்தனர்.