/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் அதிகபட்சமாக மோகனுாரில் கொட்டி தீர்த்த மழை
/
மாவட்டத்தில் அதிகபட்சமாக மோகனுாரில் கொட்டி தீர்த்த மழை
மாவட்டத்தில் அதிகபட்சமாக மோகனுாரில் கொட்டி தீர்த்த மழை
மாவட்டத்தில் அதிகபட்சமாக மோகனுாரில் கொட்டி தீர்த்த மழை
ADDED : மே 17, 2024 02:28 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக மோகனுாரில், 90 மி.மீ., மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கியது முதல், பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அதேபோல் காலை முதல் மாலை வரை வெயில் தாக்கமும் அதிகம் உள்ளது. காலை வெயில் அதிகம் இருப்பதால், மாலை நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த ஆறு நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை பெய்த மழை விடிய விடிய துாறலாக தொடர்ந்தது. நாமகிரிப்பேட்டை, வெண்ணந்துார், ராசிபுரம், பேளுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மதியம் தொடங்கிய மழை நேற்று காலை, 9:00 மணி வரை பெய்தது. முக்கியமாக மோகனுாரில் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது.
மாவட்டம் முழுவதும் நேற்று காலை, 6:00 மணி விபரப்படி பெய்த மழை விபரம் மி.மீட்டரில். எருமப்பட்டி, 5, குமாரபாளையம், 3.6, மங்களபுரம், 14, மோகனுார், 90, நாமக்கல், 12, பரமத்தி வேலுார், 2, புதுச்சத்திரம், 23, ராசிபுரம், 11, சேந்தமங்கலம், 9, கொல்லிமலை, 3, கலெக்டர் அலுவலகம், 12.50 என மாவட்டம் முழுவதும், 195.1 மி.மீ., மழை பெய்துள்ளது.

