/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை; மாயமான கணவனை தேடும் போலீஸ்
/
2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை; மாயமான கணவனை தேடும் போலீஸ்
2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை; மாயமான கணவனை தேடும் போலீஸ்
2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை; மாயமான கணவனை தேடும் போலீஸ்
ADDED : மார் 05, 2025 12:27 AM
நாமக்கல்; நாமக்கல்லில் தாய், இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். மாயமான பெண்ணின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல், சேலம் சாலை, பதி நகரில் வசிப்பவர் பிரேம் ராஜ், 33; தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி மோகனபிரியா, 33; தம்பதியரின் மகள் பிரினிதி ராஜ், 6, மகன் பிரினி ராஜ், 2; பிரேம்ராஜின் வீட்டு கதவு நேற்று மதியம் வரை திறக்கவில்லை.
சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தனர்.
வீட்டிற்குள் மோகனபிரியா, குழந்தைகள் அசைவின்றிக் கிடந்தனர். நாமக்கல் போலீசார் விரைந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்றபோது, மூவரும் இறந்து கிடந்தது தெரிந்தது. நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சடலங்களை அனுப்பி வைத்தனர்.
'ஆன்லைன் ஆப்'பில், 50 லட்சம் ரூபாய் வரை பிரேம்ராஜ் கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது. கடனை அடைக்க முடியாத நிலையில், அவர் மாயமாகியுள்ளார்.
இந்நிலையில், மனைவி, குழந்தைகள் வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பிரேம்ராஜ் மொபைல் போன், 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. இதனால் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
கணவன் மாயமான நிலையில், குழந்தைகளை கொன்றுவிட்டு, மோகனபிரியா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர். ஆனாலும், பிரேம்ராஜ் பிடிபட்டால் தான் உண்மை தெரியவரும்.