/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க மத்திய அமைச்சரிடம் எம்.பி., கோரிக்கை
/
தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க மத்திய அமைச்சரிடம் எம்.பி., கோரிக்கை
தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க மத்திய அமைச்சரிடம் எம்.பி., கோரிக்கை
தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க மத்திய அமைச்சரிடம் எம்.பி., கோரிக்கை
ADDED : ஆக 04, 2024 03:37 AM
நாமக்கல்: 'தீரன் சின்னமலைக்கு, சங்ககிரியில் முழு உருவச்சிலை அமைக்க வேண்டும்' என, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், மத்-திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ெஷகாவத்தை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மாவீரன் தீரன் சின்னமலை, 1756 ஏப்., 17ல், திருப்பூர் மாவட்டம், சென்னிமலை அருகில் உள்ள செ.மேலப்பாளையத்தில் பிறந்தார். இந்திய விடுதலை போராட்ட வீரரான தீரன் சின்னமலை, கொங்கு நாட்டில் ஓடாநி-லையில் கோட்டை கட்டி ஆட்சி செய்தார்.
தமிழகத்தில், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து கருப்பு சேர்வை-யுடன் இணைந்து போரிட்டார். 1801-ல், ஈரோடு காவிரிக்கரை-யிலும், 1802-ல் ஓடாநிலையிலும், 1804ல் அறச்சலுாரிலும் ஆங்கி-லேயர்களுடன் நடந்த போர்களில், சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.
.போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர், சூழ்ச்சி மூலம் சின்னமலையை கைது செய்து சங்ககிரி கோட்டைக்கு கொண்டு சென்று, போலியாக விசாரணை நடத்தி, 1805 ஜூலை, 31ல் துாக்-கிலிட்டனர். சங்ககிரியில் தீரன் சின்னமலை துாக்கிலிடப்பட்ட இடத்திலோ அல்லது தமிழக அரசால், சங்ககிரியில் தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ள தீரன் சின்னமலை நினைவு மண்டபம் அருகே, சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலைக்கு முழு உருவச்சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.