/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நகராட்சி சுகாதாரத்துறை ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கல்
/
நகராட்சி சுகாதாரத்துறை ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கல்
ADDED : மே 01, 2024 01:35 PM
குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில், ஓ.ஆர்.எஸ்., கரைசல் எனும் நீர்ச்சத்து அதிகரிக்கும் பானம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து, குமாரபாளையம் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறியதாவது: கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் பொதுமக்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, பல நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, குமாரபாளையம் நகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில், ஓ.ஆர்.எஸ்., கரைசல் எனும் நீர்ச்சத்து அதிகரிக்கும் பானம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
நாமக்கல், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி உத்தரவுப்படி, எலந்தகுட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் மனோகரன் தலைமையில், குமாரபாளையம் நகரில் பஸ் ஸ்டாண்ட், கவுரி தியேட்டர் பஸ் ஸ்டாப் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த ஓ.ஆர்.எஸ். கரைசலை பருகி, நீர்ச்சத்து குறைபாட்டினை போக்கி கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.