/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முத்தாலம்மன், சந்தியப்பன், காளியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

ADDED : செப் 03, 2024 04:35 AM
மோகனுார்: மோகனுார் ஒன்றியம், மணப்பள்ளி பஞ்.,க்குட்பட்ட மேலபேட்-டபாளையத்தில், முத்தாலம்மன், சந்தியப்பன், காளியம்மன கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் குண்டம் திரு-விழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம்.
இந்தாண்டு விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்-டது. தொடர்ந்து காவிரி ஆற்றில் கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடந்-தது.கோவில் பூசாரி பூங்கரகம் எடுத்தும், வேல் பூசாரி, அருவாள் பூசாரி ஆகியோர் காவிரி ஆற்றில் இருந்து முக்கிய வீதிகள் வழி-யாக வந்து கோவிலை அடைந்தனர். மூலவர் தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை, 6:00 மணிக்கு, கோவில் முன் தீக்குண்டம் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, மாலை, 3:00 மணிக்கு காவிரி ஆற்றுக்கு சென்ற பக்-தர்கள் புனித நீராடி, ஊர்வலமாக வந்து, கோவில் முன் அமைக்-கப்பட்டிருந்த குண்டத்தில் ஆண்கள் இறங்கி, அம்மனுக்கு தங்க-ளது வேண்டுதலை நிறைவேற்றினர்.
மேலும், பெண்கள் தலையில் பூவாரி கொட்டி, நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு, 7:00 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செயதிருந்தனர்.