/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோவிலுக்கு மர்ம நபர் பூட்டு; ராசிபுரம் அருகே பரபரப்பு
/
கோவிலுக்கு மர்ம நபர் பூட்டு; ராசிபுரம் அருகே பரபரப்பு
கோவிலுக்கு மர்ம நபர் பூட்டு; ராசிபுரம் அருகே பரபரப்பு
கோவிலுக்கு மர்ம நபர் பூட்டு; ராசிபுரம் அருகே பரபரப்பு
ADDED : செப் 01, 2024 03:49 AM
ராசிபுரம்: ராசிபுரம் அருகே கோவிலுக்கு, மர்ம நபர் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த கடந்தப்பட்டியில் அங்காளம்மன் கோவில் உள்ளது. வழக்கு தொடர்பாக இக்-கோவில், 13 ஆண்டுகளாக பூட்டப்பட்டது. ஓராண்டுக்கு முன் பிரச்னை முடிவுக்கு வந்ததால் திறக்கப்பட்டது.
அங்காளம்மன் அறக்கட்டளை சார்பில் நிர்வகிக்கப்பட்டது. மாணிக்கம் தரப்பினர், கோவில் பெயரில் ரசீது அடித்து பக்தர்க-ளிடம் பணம் வசூல் செய்தனர். இதனால் நிர்வாகத்தில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார், வருவாய்துறை-யினர் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் ஒரு தரப்பினர், கோவிலின் மூன்று கதவுகளுக்கும் உள்பக்கமாக தாழிட்டு விட்-டதால், மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. நேற்று முன்தினம் அதி-காலை பிரச்னைக்குரிய நபர்கள், கோவில் கதவுக்கு தனியாக ஒரு பூட்டு போட்டனர். இதை பார்த்த மக்கள் பூட்டை உடைத்து கோவிலுக்குள் சென்றனர். 'சிசிடிவி' கேமராவில் பார்த்ததில், கோவிலை பூட்டி சென்றது இதே பகுதியை சேர்ந்த தனக்கொடி, 55, என்பது தெரிந்தது. அவரை புதுச்சத்திரம் போலீசாரிடம் ஒப்-படைத்தனர்.
இப்பிரச்னைக்கு மத்தியில் கோவில் பூசாரி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்கு-வாதம் ஏற்பட்டது. நேற்று காலை நடையை திறக்க முயன்ற போது, பூசாரி தரப்பினர் உள்ளிட்ட சிலர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கோவிலின் வடக்கு பகுதி கேட்-டை திறந்து, மக்கள் கோவில் வளாகத்திற்குள் சென்றனர்.
புதுச்சத்திரம் போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்-தினர். அமைதி பேச்சுவாரத்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காணும் வரை, கோவிலுக்குள் அமைதி போராட்டம் நடத்-துவோம் எனக்கூறி, மக்கள் உள்ளே உட்கார்ந்து போராட்டம் நடத்தினர். பதற்றம் நிலவுவதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.