/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெண்ணந்துார் அருகே விவசாய கிணற்றில் உர பாக்கெட்டுகளை வீசிய மர்ம நபர்கள்

ADDED : ஆக 07, 2024 02:09 AM
வெண்ணந்துார்,வெண்ணந்துார் அருகே, ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி, 38. இவர், 9 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அங்கு, 70 அடி ஆழ கிணறு உள்ளது. அந்த கிணற்றில், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் நுண்ணுயிர் உர பாக்கெட்டுகள், 1,000 கணக்கில் வீசப்பட்டிருந்தன. இந்த உர பாக்கெட்டுகளை, வேளாண் அதிகாரிகள் முறையாக விவசாயிகளுக்கு வழங்கவில்லையா? அல்லது காலாவதியானதால் கிணற்றில் வீசிச்சென்றனரா என, தெரியவில்லை.
இதுகுறித்து, கிணற்றின் உரிமையாளர் மூர்த்தி கூறுகையில், ''கிணற்றில் மர்ம நபர்கள் காலாவதியான உரங்களை வீசி சென்றது தெரியாமல், குடிநீர் அருந்தியதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளானேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின், கிணற்றில் பார்த்தபோது தான், உர பாக்கெட்டுகள் வீசப்பட்டிருப்பது தெரிய வந்தது. உர பாக்கெட்டுகளை வீசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.வெண்ணந்துார் வேளாண்மை உதவி இயக்குனர் தனம் கூறுகையில், ''நாங்கள் முறையாக விவசாயிகளுக்கு உரம் வழங்கி வருகிறோம். சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த பின் தான், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.