/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
4 வயது சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு நாமக்கல் கலெக்டர் உடனடி நடவடிக்கை
/
4 வயது சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு நாமக்கல் கலெக்டர் உடனடி நடவடிக்கை
4 வயது சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு நாமக்கல் கலெக்டர் உடனடி நடவடிக்கை
4 வயது சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு நாமக்கல் கலெக்டர் உடனடி நடவடிக்கை
ADDED : ஆக 09, 2024 03:37 AM
குமாரபாளையம்: குமாரபாளையத்தை சேர்ந்த, நான்கு வயது சிறுவனின் தொண்டை அறுவை சிகிச்சைக்கு, நாமக்கல் கலெக்டர் உமா உட-னடி நடவடிக்கை மேற்கொண்டார்.
குமாரபாளையம், பெராந்தார்காடு பகுதியில் வசிப்பவர் சுரேஷ், 35; கூலித்தொழிலாளி. இவரது மகன் சிவா, 4. இவருக்கு தொண்டையில் கட்டி இருப்பதால் அதை அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதற்காக மருத்துவ காப்பீடு அட்டை பெறுவதற்காக, குமாரபா-ளையம் தாலுகா அலுவலகத்தில் ரேஷன்கார்டு பதிவு செய்து ஒரு ஆண்டுக்கும் மேலாகியும் ரேஷன்கார்டு கிடைக்கவில்லை. இது குறித்து சிறுவனின் பெற்றோர், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலர் காமராஜ், மகளிரணி மாவட்ட அமைப்பாளர் சித்ரா-விடம் புகார் தெரிவித்தனர்.
அவர்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் இது குறித்து புகார் தெரிவித்தனர். சிறுவனின் அப்பாவை நேரில் வர சொல்லி, கலெக்டர் விபரம் கேட்டறிந்தார். காப்பீடு அட்டைக்கு ஏற்பாடு செய்கிறேன், நீங்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சையை செய்யுங்கள். நாங்கள் மருத்துவமனையில் கூறி விடுகிறோம் என கலெக்டர் உமா கூறியதுடன், உடனடியாக அறுவை சிகிச்சைக்-கான ஏற்பாடுகளை செய்தார்.
நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிறுவனை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். புகாரினை ஏற்று உடனடியாக மருத்துவ தீர்-வை ஏற்படுத்திய நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமாவிற்கு சிறு-வனின் குடும்பத்தார், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் நன்றி தெரி-வித்தனர்.